உள்ளூர் செய்திகள்

வெட்டூர்ணிமடத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு

முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

நாகர்கோவில்:

வெட்டூர்ணிமடத்தில் உள்ள காமராஜர் சிலை மறுசீரமைப்பு பணியை முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தனது சொந்த நிதியில் மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளான இன்று மறுசீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகே சன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் அந்த பகுதியில் மரக்கன்றுகளை அவர் நட்டார். ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகளை யும் நாஞ்சில் முருகேசன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் சந்திரன், ராஜேந்திரன், சிவலிங்கம், கோபால், சிவசங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.