உள்ளூர் செய்திகள்

குளச்சலில் கிளாத்தி மீன் விலை வீழ்ச்சியால் மீனவர்கள் கவலை

கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றனவள்ளங்கள் அருகில் சென்று மீன்பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும்

நாகர்கோவில் : குளச்சலில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 முதல் 15 நாட்கள் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர்ரக மீன்களாகிய இறால், புல்லன், கணவாய், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும். கட்டுமரம், வள்ளங்கள் அருகில் சென்று மீன்பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும். இதில் சாளை, நெத்திலி, வேள மீன்கள் பிடிக்கப்படுகிறது. தற்போது விசைப்படகுகளில் கிளாத்தி மீன்கள் கிடைத்து வருகிறது. இன்று காலை கரை திரும்பிய விசைப்படகுகளில் அதிகமான கிளாத்தி மீன்கள் கிடைத்தன. இதை மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர். இந்த மீன்களை கோழி தீவனம் தயாரிப்பிற்காக வியாபாரிகள் வாங்கி சென்றனர். காலையில் கிலோ ஒன்றுக்கு ரூ.20-க்கு விலைபோன கிளாத்தி மீன்கள் பின்னர் விலை வீழ்ச்சியடைந்து ரூ.16-க்கு விலைபோனது. இதனால் விசைப்படகினர் கவலையடைந்தனர்.

SCROLL FOR NEXT