உள்ளூர் செய்திகள்

தக்கலையில் முதியவர் மர்ம சாவு

ஊர் மக்கள் தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தேவதாசை யாராவது அடித்து கொலை செய்தார்களா? இல்லை வேறு ஏதாவது காரணமா? என விசாரணை

கன்னியாகுமரி :

தக்கலை அருகே பாலப்பள்ளி கூவர விளையை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது55). கட்டிட தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இவருக்கு 3 பிள்ளைகள் உண்டு. மூவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். நேற்றைய முன்தினம் தேவதாஸ் வீட்டிலிருந்து வேலைக்கு சென்றதாக தெரிகிறது. ஆனால் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் நேற்று அவர் ஊர் அருகில் உள்ள கொற்றி குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த ஊர் மக்கள் தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இறந்துபோன தேவதாசின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தது. இதனால் தேவதாசை யாராவது அடித்து கொலை செய்தார்களா? இல்லை வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரேத பரிசோ தனைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாது சுந்தர் சிங் வழக்குப்பதிவு செய்தார்.