கன்னியாகுமரி:
கிள்ளியூர் பேரூராட்சியில் முதல் வார்டில் சந்திர கலாதரன் (தி.மு.க.) 2-வது வார்டில் செல்வராஜ் (காங்), 3-வது வார்டில் ராபின்சன் (தி.மு.க.), 4-வது வார்டில் சத்தியராஜ் (தி.மு.க.), 5-வது வார்டில் சுஜி (தி.மு.க.), 6-வது வார்டில் செல்வி (தி.மு.க.), 7-வது வார்டில் ஷீலா (தி.மு.க.), 8-வது வார்டில் விபின் ராஜ் (காங்), 9-வது ஜெயராணி (காங்), 10-வது வார்டில் அருள்தாஸ் (காங்) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
11-ம் வார்டில் மேரி கலா (தி.மு.க.), 12-ம் வார்டில் கிளாரா எலிசபத் கில்டா (தி.மு.க.), 13-ம் வார்டில் ஷாலினி (தி.மு.க.), 14-ம் வார்டில் சகாயமேரி (தி.மு.க.), 15-ம் வார்டில் டெல்மா (காங்) 16-ம் வார்டில் லிட்டில் பிளவர் (பா.ஜனதா), 17-ம் வார்டில் எஸ்மா டென்ஸ் (காங்), 18-ம் வார்டில் ஸ்டாலின் ராஜ் (தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
தி.மு.க. 11 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்றனர். ஒரு இடம் பிடித்த பாரதிய ஜனதா கடைசி இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளது.
கீழ்குளம் பேரூராட்சியில் 1-வது வார்டில் ஜாஸ்மின் (பா.ஜனதா), 2-வது வார்டில் மார்கிரேட் ஜோசப் (காங்), 3-வது வார்டில் சுகந்தி (பா.ஜனதா), 4-வது வார்டில் சமுத்திரபாண்டியன் (பா.ஜனதா), 5-வது வார்டில் ஷோபா (தி.மு.க.), 6-வது வார்டில் விஜயகுமார் (காங்), 7-வது வார்டில் தீபா (பா.ஜனதா), 8-வது வார்டில் விஜயகுமார் (பா.ஜனதா), 9-வது வார்டில் மல்லிகா (பா.ஜனதா), 10-வது வார்டில் அல்போன்சாள் (தி.மு.க.) வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
11-வது வார்டில் கிருஷ்ணன் (அ.தி.மு.க.), 12-வது வார்டில் ஜாண் ரெஞ்சித்சிங் (தி.மு.க.), 13-வது வார்டில் இப்ராகீம் (தி.மு.க.), 14-வது வார்டில் லாசர் (சுயே), 15-வது வார்டில் அனிதா (காங்), 16-வது வார்டில் சுகராபீவி (தி.மு.க.), 17-வது வார்டில் சரளா (தி.மு.க.), 18-வது வார்டில் எமில் ஜெபசிங் (காங்) ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இப்பேரூராட்சியில் தி.மு.க. 6 உறுப்பினர்களையும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் 4 உறுப்பினர்களையும் பெற்றுள்ளதால் இக்கூட்டணி தலைவர் பதவியை பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.