கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

புதுக்கடை அருகே கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை

புதுக்கடை அருகே கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மாலை மலர்

கன்னியாகுமரி:

புதுக்கடை அருகே உதச்சிக்கோட்டை பகுதி தட்டான்விளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஹென்றிசன். இவர் அரசு போக்குவரத்து கழகம் குழித்துறை டெப்போவில் கண்டக்டராக பணிபுரிகிறார். இவர் மகள் அகிலா (வயது 21).

அகிலா  மார்த்தாண் டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார்.  

சம்பவத்தன்று  ஹென்றிசன் மற்றும் அவர் மனைவி, மகனுடன்  உறவினர் வீடு பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு சென்றனர். அகிலாவை அழைத்தபோது, நிகழ்ச்சிக்கு வரவில்லை என கூறி வீட்டில் தனியாக இருந்துள்ளார். நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது வீடு பூட்டியிருந்தது. 

சத்தம் போட்ட பிறகும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த ஹென்றிசன் மாடி வழியாக ஏறி உள்ளே சென்று பார்த்தபோது, அகிலா படுக்கை அறை மின் விசிறியில் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் காணப்பட்டார்.

இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் உடலை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.