கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி கடத்தல்

மார்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்டார்.

மாலை மலர்

நாகர்கோவில்:

மார்த்தாண்டம் கணக் கோடு தெங்கன்குழிவிளையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 44). இவரது மகள் சினேகா (19). குழித்துறையில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர் அவரை தேடினார்கள். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சுரேசிடம் பேசிய நபர் ஒருவர் தங்களது மகளை அழைத்து செல்வதாகவும் அவளை தேட வேண்டாம் எனவும் கூறிவிட்டு போனை துண்டித்துள்ளார்.

இது குறித்து சுரேஷ் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.