உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டம் அருகே கல்லறை வழிப்பாதை தொடர்பாக இரு தரப்பினர் மோதல் பதட்டம்-பரபரப்பு

மார்த்தாண்டம் நல்லூர் காரவிளை பகுதியில் ஒரு பிரிவினரின் கல்லறை இருந்து வருகிறதுஇரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது

மாலை மலர்

நாகர்கோவில் : மார்த்தாண்டம் நல்லூர் காரவிளை பகுதியில் ஒரு பிரிவினரின் கல்லறை இருந்து வருகிறது. அந்த கல்லறைக்கு வழி சம்பந்தமாக இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தக்கலை சப்-கலெக்டருக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் இரு பிரிவினரையும், தக்கலை சப்-கலெக்டர் கவுசிக் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விசாரணைக்கு ஒரு தரப்பினார் ஆஜ ராகி உள்ளனர். மறு தரப்பினர் விசாரணைக்கு ஆஜரா காததால், ஆஜராகா தவர்களை பிடித்து சப்-கலெக்டர் அலுவலகத்தில் விசாரணைக்கு கொண்டு செல்லும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் அடிப்படையில், மார்த்தாண்டம் போலீசார் ஒரு தரப்பை சேர்ந்த தங்கப்பன் என்பவரை பிடித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து தங்கப்பனின் ஆதரவாக ஒரு தரப்பினர், போலீஸ் நிலை யத்தில் முற்றுகை போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதனால் போலீஸ் நிலையத்திற்கு முன்பு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட னர்.