கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

ஆட்டோ டிரைவர் தற்கொலை

குலசேகரம் அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்டார்.

கன்னியாகுமரி:

குழித்துறை அருகே உள்ள வாத்தியார்விளை பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 55). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார் கடந்த 10 ஆண்டுகளாக முதுகு தண்டுவட பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த ரவீந்திரன், அதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

திருவட்டாறு அருகே உள்ள பூந்தோப்பு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யில் தங்கி சிகிச்சை பெற்ற அவர் மனவேதனை அடைந்து அறையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அவரது மனைவி ஜிஜா புகாரின் பேரில் திருவட்டாறு போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவீந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT