கன்னியாகுமரி :
காரக்குறிச்சி அருகே உள்ள கல்பாடி காருப்பாறை பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 70).
இவர் நேற்று இரவு கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரம் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அவர் "திடீர்"என்று ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று இவர் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.
பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன்அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கன்னியா குமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.