கோப்பு படம்  
உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே சமையல் செய்த போது தீ விபத்தில் பெண் படுகாயம்

காப்பாற்றச் சென்ற கணவருக்கும் காயம்இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

மாலை மலர்

கன்னியாகுமரி:

இரணியல் அருகே உள்ள ஆழ்வார்கோயில் நடுத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 35). இவரது மனைவி மாரிபொண்ணு(26). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகின்றன.

நேற்று காலை மாரி பொண்ணு சமையல் செய்வதற்காக வீட்டில் உள்ள விறகு அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண் எண்ணை கேன், மாரிபொண்ணு மீது விழுந்ததால் அவர் மீதும் தீப்பிடித்தது.

இதனால் தீக்காயம் அடைந்த அவரது அலறல் சத்தம் கேட்டு கணவர் சண்முகராஜ் ஓடி வந்தார். அவர் மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் அவரது கை, நெஞ்சு, முகம் ஆகிய பகுதிகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. அவரையும் மாரிப் பொண்ணுவையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சண்முகராஜ் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.