அருமனை :
அருமனை அருகே உள்ள செம்மங்காலையை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் சிபி (வயது 18). இவர் மோட்டார் சைக்கிளில் மேல்புறம் அயக்கோட்டு பகுதியில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் நடந்து சென்ற வசந்தா (63), மனோகரன் (60) ஆகியோர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் சிபி உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த சிபி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.