உள்ளூர் செய்திகள்

அஞ்சுகிராமம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.சிகிச்சை பலன் இன்றி ராஜா பரிதாபமாக இறந் தார்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் இரு ளப்பபுரத்தை சேர்ந்த வர் ராஜா (வயது 41). இவர் அஞ்சுகிராமம் அருகே தெற்கு பகவதிபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். உடனடியாக அவரை அந்த வழியாக சென்ற வர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் இன்றி ராஜா பரிதாபமாக இறந் தார்.

இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் கள்.