நாகர்கோவில் :
நாகர்கோவில் பார்வதிபுரம் கட்டையன் விளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 42). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். சமீபத்தில் ஊருக்கு வந்துள் ளார்.
இவரது மனைவி ஏஞ்சலின் தயா (36). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் அரிவாளால் மனைவி ஏஞ்சலின் தயாவை தலை, கழுத்து, கை உள்பட 5 இடங்களில் சரமாரியாக வெட்டினார்.
இதில் ஏஞ்சலின் தயா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து வடசேரி போலீசில் ஏஞ்சலின்தயா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் செல்வ ராஜ் மீது கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவியை அரிவாளால் வெட்டியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் செல்வராஜுக்கும் அவரது உறவுக்கார பெண் ஒருவருக்கும் இடையே இருந்த பழக்கத்தை ஏஞ்சலின் தயா பலமுறை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் அவரை வெட்டி இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். போலீசார் தேடுவது அறிந்த செல்வராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.