கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் கேரளாவுக்கு 100-க்கணக்கான லாரிகள் கனிம வளங்களை அதிக பாரத்துடன் கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
தினசரி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியா மலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியா மலும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் படந்தாலுமூடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த 4 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த போது கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலும் இந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? இதன் உரிமையாளர் யார்? என்று போலீசார் தொ டர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.