உள்ளூர் செய்திகள்

புதுக்கடை பகுதியில் ஒரே நாளில் 3 வாகன விபத்துகள்; 4 பேர் படுகாயம்

தந்தை - மகன் இருவரும் படுகாயமடைந்தனர்.விபத்துகள் தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமாரி:

புதுக்கடையை அடுத்த கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் (வயது 59). இவர் சம்பவ தினம் தனது மகன் அபிசின் (21) என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்து புதுக்கடை - வெட்டு மணி சாலையில் சென்று கொண்டிருந்தார். காப்புக் காடு பகுதியில் செல்லும் போது அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று மோட்டார் சைககிள் மீது மோதியது. இதில் தந்தை - மகன் இருவரும் படுகாயமடைந்தனர்.இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்கு அனுமதித்தனர்.

மேலும் தொழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஞான முத்து மனைவி தங்கபாய் (64). இவர் நேற்று தனது வீட்டருகே சாலையோரத்தில் புல்அறுத்துக் கொண்டி ருந்தார். அப்போது சாலை யில் அதிவேகமாக வந்த பிக்கப் வாகனம் ஒன்று தங்கபாய் மீது மோதியது. இதில் அவர் படுகாய மடைந்தார்.. வாகனத்தை ஓட்டி வந்தவர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பியோடி யுள்ளார். படுகாயமடைந்த தங்க பாய் காஞ்சிர கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வருகிறார்.

இது போன்று தேங்கா பட்டணம் பகுதி பாலத்தடி என்ற இடத்தை சேர்ந்த லாரன்ஸ் (63) என்பவர் நேற்று காலையில் தனது மகன் தினேஷ் (28) என்பவருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முக்காடு பகுதியை சேர்ந்த அஜீத் என்பவர் ஓட்டி வந்த பைக் தினேஷ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் காஞ்சிர கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமத்க்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்துகள் தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.