கோப்பு படம்  
உள்ளூர் செய்திகள்

மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விலை உயர்வை திரும்ப பெறுவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்ததுஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

நாகர்கோவில்:

பால் விலை உயர்வு, சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு செல்வராணி தலைமை தாங்கினார். சுபாஷ் சந்திர போஸ் சுதா, மதன், பார்வதி, ராஜேஷ்வரி, இசக்கிமுத்து உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

SCROLL FOR NEXT