மாரிமுத்து 
உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழி அருகே மினி டெம்போ கவிழ்ந்து டிரைவர் பலி

ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைஉடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

கன்னியாகுமரி:

தூத்துக்குடி மாப் பிள்ளை லுரணி பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை இவரது மகன் மாரிமுத்து (வயது 28). இவர் ஆரல்வாய்மொழி பகுதியிலுள்ள கல்லூரி ஒன்றில் உள்ள மினி டெம்போ ஒன்றை ஓட்டி வந்தார்.

சம்பவத்தன்று மாரிமுத்து மினி டெம்போவை முப்பந்தல் பகுதியில் ஓட்டி சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த பள்ளத்தில் மினி டெம்போ கவிழ்ந்தது.

படுகாயம் அடைந்த மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாரிமுத்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான மாரிமுத்துவிற்கு செல்லா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ள னர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் மாரிமுத்துவிற்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் அவர் பலியாகி இருப்பது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT