முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு நள்ளிரவில் ஆராட்டு

தை அமாவாசை விழா நிறைவுபெற்றதை யொட்டி நடந்தது விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தை அமாவாசை விழா கோலாகலமாக கொண்டாட ப்பட்டது. இதையொட்டி நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடைமட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது.

அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டது.

அதன் பிறகு 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனு மதிக்கப்பட்டார்கள். இரவு 9 மணிக்கு பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும்போது பக்தர்கள் வழிெநடுகிலும் தேங்காய்பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்டனர்.

அம்மன் வீதி உலா முடிந்த பிறகு நள்ளிரவு 11 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின்கிழக்குவாசல் திறக்கப்பட்டு அதன்வழியாக அம்மன்கோவிலுக்குள் பிரவேசித்த நிகழ்ச்சியும் நடந்தது.

அதன்பிறகு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள்பிர காரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வர செய்தார்கள். பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அதன்பிறகு அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.

விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

SCROLL FOR NEXT