மகேஷ் 
உள்ளூர் செய்திகள்

என்.ஜி.ஓ.காலனி அருகே வீட்டின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

செல்போன் பேசி கொண்டிருந்தபோது பரிதாபம்சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

நாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ. காலனி குஞ்சன் விளையைச் சேர்ந்தவர் மகேஷ் வயது 32 வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தார். வீட்டின் 2-வது மாடியில் நின்று மகேஷ் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி கீழே விழுந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

இதையடுத்து மகேஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT