பலியான சுபா 
உள்ளூர் செய்திகள்

வெள்ளமடம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் பலி

மற்றொருவர் படுகாயம்ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கன்னியாகுமரி:

ராஜாவூரை அடுத்த ஆதலவிளை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சுபா (வயது 43). இவர், நாக்கால் மடம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் வேலை பார்த்து வந்தார்.

நேற்று வேலை முடிந்து அதே ஊரைச் சேர்ந்த தங்கசெல்வி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். மோட்டார் சைக்கிளில் சுபா பின்னால் அமர்ந்திருந்தார்.

வெள்ள மடம் நான்கு வழிச்சாலையில் சென்ற போது பணகுடியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த விஜய் என்பவர் அதிவேகமாக வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.

இதில் சுபா தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுபா பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த தங்க செல்விக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த விஜய் மற்றும் முடி சூடும் பெருமாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இறந்து போன சுபாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் முருகன் வெல்டிங் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.