திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே கடந்த 28ம் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது நவீன்குமார் (வயது 25), சேதுபதி (22), நாட்ராயன் (48), முருகன் (எ) பூசாரி முருகன் (55) ஆகிய 4 பேரும் 220 கிலோ கஞ்சாவுடன் சிக்கினர்.
போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர்கள் மீதான குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் விசாகன் அவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து பட்டிவீரன்பட்டி போலீசார் அவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.