உள்ளூர் செய்திகள்

சிவகிரியில் கந்த சஷ்டி விழா-சோமாஸ்கந்தர் அலங்காரத்தில் சுவாமி வீதி உலா

பாலசுப்பிரமணிய சுவாமி, முத்துக்குமார சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிவகிரி:

சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான நேற்று காலையில் யாகசாலை பூஜையை தொடர்ந்து பாலசுப்பிரமணிய சுவாமிக்கும், முத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து சோமாஸ்கந்தர் அலங்காரத்தில் சுவாமி நான்கு ரதவீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா குடும்ப த்தினர் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT