பழனிசாமி. 
உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஐ.ஜே.கே தலைவராக பழனிசாமி நியமனம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஐ.ஜே.கே தலைவராக பழனிசாமி நியமனம் செய்யப்பட்டார்.கடந்த காலங்களில் சிறப்பாக கட்சிப் பணி செய்ததற்காக பழனிசாமியை பொறுப்பாளர்கள் பாராட்டினர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே எரவர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி, இவர் விழுப்புரம் (மேற்கு) மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவ ராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 25 -ந் தேதி சென்னையில் இந்திய ஜனநாயக கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் ஐ.ஜே.கே. கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து வின் அறிவுரையின்படியும், பச்சமுத்து எம்.பி. பரிந்துரை யின்படியும், மாநில பொதுச் செயலாளர் ஜெயசீலன், அமைப்புச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோரின் ஆலோசனை படியும் மீண்டும் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த ஐ.ஜே.கே. மாவட்ட தலைவராக பழனிசாமி நியமனம் செய்யப்பட்டார். மேலும் கடந்த காலங்களில் சிறப்பாக கட்சிப் பணி செய்ததற்காக பழனிசாமியை பொறுப்பா ளர்கள் பாராட்டினர். தொடர்ந்து சிறப்பாக பணி யாற்றும்படி ஆலோசனை வழங்கினர். கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த ஐ.ஜே.கே. மாவட்ட தலைவராக மீண்டும் நியமனம் செய்யப்பட்ட பழனிசாமியை மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT