உள்ளூர் செய்திகள்

நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு

கீழ மேட்டுப்பட்டியில் இருந்து திருவோணம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

திருவோணம்:

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள கீழமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி

பானுமதி (வயது 65). பன்னீர்செல்வம் ஏற்கனவே இறந்து விட்டார்.

இதனால் வறுமையில் வாடிய பானுமதி பிழைப்பிற்காக வீட்டில் பசுமாடுகள் வளர்த்து வருகிறார்.

தினமும் அதிகாலையில் மாட்டின் பாலை கறந்து இப்குதியில் உள்ள கடைகளுக்கு சென்று கொடுப்பது இவரது வழக்கம். வழக்கம் போல் இன்று காலையும் மாட்டின் பாலை கறந்து கடைக்கு கொடுப்பதற்காக கீழ மேட்டுப்பட்டியில் இருந்து திருவோணம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்மநபர்கள் பானுமதியை தாக்கி அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இது குறித்து பானுமதி திருவோணம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியிடம் நகைபறிப்பில் ஈடுப்பட்ட மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் திருவோணம் பகுதியில் மோட்டார்சைக்கிள் திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT