கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

மொரப்பூர் அருகே லாரி டிரைவர் வீட்டில் நகை கொள்ளை

மொரப்பூர் அருகே லாரி டிரைவரின் வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு 8 பவுன் நகையை மர்ம கும்பல் திருடி சென்றது.

மாலை மலர்

மொரப்பூர்:

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த மருதிப்பட்டி மோட்டூரை சேர்ந்தவர் துரை (வயது 47). லாரி டிரைவர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு கீழ்மொரப்பூரில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றார். 

இந்த நிலையில், நேற்று காலை பக்கத்து வீட்டை சேர்ந்த கவிதா என்பவர் வீட்டின் கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக துரைக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து துரை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த  8 பவுன் தங்க நகை திருடு போனது தெரிய வந்தது. 

இந்த சம்பவம் குறித்து துரை அளித்த மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.