பல்லடம் :
பல்லடத்தில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 -வது பிறந்தநாளை முன்னிட்டு நகர அ.தி.மு.க. சார்பில், பல்லடம் பஸ் நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த விழாவில் அ.தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி,கூட்டுறவு சங்கத் தலைவர் பானு பழனிச்சாமி, நகர நிர்வாகிகள் தர்மராஜன், தமிழ்நாடு பழனிச்சாமி, மரக்கடைகிருஷ்ணமூர்த்தி, லட்சுமணன், நாராயணன்,ரமேஷ்,கந்தசாமி, மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.இதே போல பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில், தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர் துரைக்கண்ணன்,வக்கீல் வெங்கடா ஜலபதி,ஞானாம்பிகை உள்பட பலர் கலந்து கொண்டனர்.