உள்ளூர் செய்திகள்

குன்னூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி

கோட்டாட்சியர் புஷண் குமார் தமிழக அரசின் சார்பில் ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பி நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர் 3 நாள் நடைபெற்ற ஜமாபந்தியில் 396 மனுக்கள் பெறப்பட்டது.

மாலை மலர்

குன்னூர்,

குன்னூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி கோட்டாட்சியர் புஷண் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கேத்தி, அதிகரட்டி மற்றும் குன்னூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது மனுக்களை அளித்தனர்.

முன்னதாக குன்னூர் கோட்டாட்சியர் புஷண் குமார் தமிழக அரசின் சார்பில் ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பி நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

3 நாள் நடைபெற்ற ஜமாபந்தியில் 396 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என குன்னூர் கோட்டாட்சியர் புஷண் குமார் தெரிவித்தார். அவருடன் குன்னூர் தாசில்தார் சிவக்குமார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.