அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் தி.மு.க. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருமாறு நேரில் அழைப்பு விடுத்த தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன். 
உள்ளூர் செய்திகள்

தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தென்காசி விழாவில் கலந்து கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சென்னையில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவு பரிசையும் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்.

தென்காசி:

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலக அடிக்கல் நாட்டு விழா மற்றும் பொற்கிழி வழங்கும் விழா, முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு 100 அடி கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தர வேண்டும் என கூறி இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சென்னையில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவு பரிசையும் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்.

SCROLL FOR NEXT