தருமபுரி,
தருமபுரி அருகே குண்டல்பட்டியில் பாஸ்கர் நவீன புழுங்கல் அரிசி ஆலை புதியதாக கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அரசு அரவை முகவராக உள்ள தொழில் அதிபர் பி.பாஸ்கரால் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையில், ஒரு நாளைக்கு 100டன் நெல் அரவை செய்யும் திறன் கொண்ட நவீன எந்திர வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் புளியிலிருந்து தொட்டு நீக்கும் நவீன எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன் புழுங்கல் அரிசி ஆலை திறப்பு விழா மற்றும் புளி தொட்டு நீக்கும் நவீன எந்திரம் அறிமுக விழா நாளை காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
விழாவில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ஆலையை திறந்து வைத்து, புளி தொட்டு நீக்கும் நவீன எந்திரத்தை அறி முகப்படுத்துகிறார்.
விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், இந்நாள்-முன்னாள் அமைச் சர்கள், அரிசி ஆலை அதிபர்கள், புளி வணிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பச்சரிசி அரவை முகவர்கள் நல சங்க பொதுச் செயலாளரும், தர்மபுரி மாவட்ட புளி வணிகர்கள் நல சங்க நிறுவன தலைவரும், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநில துணைத்தலைவரும், பச்சமுத்து கல்வி நிறுவ னங்களின் தலைவருமான பி.பாஸ்கர், நிர்வாக இயக்கு னர் சசிகலா பாஸ்கர், இயக் குனர்கள் பி.சங்கீத்குமார், பி.ரங்கநாதன், சங்கீதா புஷ்ப சேகர் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
இது தொடர்பாக தொழில் அதிபர் பி. பாஸ்கர் கூறுகை யில், தர்மபுரி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன புழுங்கல் அரிசி ஆலை மூலம் ரேஷன் கடைகளுக்கு தரமான புழுங்கல் அரிசி வினியோகம் செய்யப்படும். இதன் மூலம் பொதுமக்க
ளுக்கு தரமான இட்லி அரிசி கிடைக்கும். இதேபோன்று இந்தியாவிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள புளி தொட்டு நீக் கும் நவீன எந்திரம் மூலம் வியாபாரிகள் கொண்டு வரும் தொட்டு புளி லோடு ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் வரை சேமிக்க முடியும் என்றார்.