உள்ளூர் செய்திகள்

விருத்தாசலத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை திருட்டு

உளுந்தூர்பேட்டையில் இருந்து நெய்வேலி செல்வதற்காக விருத்தாசலம் செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார். அவர் அருகில் இருந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.

கடலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பு.மலையனூரை சேர்ந்தவர் பாக்யராஜ். இவரது மனைவி கோகிலா. சம்பவத்தன்று இவர் உளுந்தூர்பேட்டையில் இருந்து நெய்வேலி செல்வதற்காக விருத்தாசலம் செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார். விருத்தாசலம் வந்து பஸ்சில் இருந்து இறங்கியபின்னர் தனது கைப்பையை கோகிலா சோதனை செய்தார். அதில் இருந்த நெக்லஸ், செயின, மோதிரங்கள் உள்ளிட்ட 5 பவுன் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் ேபாலீசில் புகார் செய்தார். அப்போது அவர் அருகில் இருந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட விருத்தாசலம் போலீசார் காணாமல் போன நகை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT