மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். 
உள்ளூர் செய்திகள்

வேதாரண்யத்தில், மறைந்த முதல்-அமைச்சருக்கு திதி கொடுத்த முன்னாள் அமைச்சர்

கடற்கரையில் உள்ள தியான மண்டபத்தில் ஜெயலலிதாவின் உருவ படம் வைக்கபட்டு மலர் தூவி அஞ்சலி.அரிசி, காய்கறிகள் பிண்டம் வைத்து மறைந்த முதல்-அமைச்சருக்கு திதி கொடுத்து கடலில் விட்டனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திதி கொடுத்தார்.

முன்னதாக கடற்கரையில் உள்ள தியான மண்டபத்தில் ஜெயலலிதாவின் திருவுருவ படம் வைக்கபட்டு மலர் தூவி அஞ்சலி, செலுத்தினர்.

பின்னர் அரிசி, காய்கறிகள் பிண்டம் (சோற்று உருண்டை)வைத்து மறைந்த முதல்-அமைச்சருக்கு திதி கொடுத்து கடலில் விட்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT