உள்ளூர் செய்திகள்

திருவாரூரில், 18-ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

திருவாரூர்:

திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் கோட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

அதன்படி வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணியளவில் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

இதில் திருவாரூர் வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.