பல்லடம் :
தமிழ்நாட்டில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 16ந்தேதி அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது மகாலட்சுமி நகர், அவரப்பாளையம், சிங்கனூர், கோடங்கி பாளையம், உள்ளிட்ட இடங்களில் சட்டவி ரோதமாக மதுபானம் விற்பனை செய்த மணிகண்டன்(39) ரமேஷ்(31) முனியாண்டி (19) விஜய் (26) சரவணன் (36) கார்த்திக் (40) இளையராஜா, (38) ஆகிய 7 பேரை மடக்கிப் பிடித்து அவர்களிடமிருந்து 47 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
இதே போல பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட புளியம்பட்டியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த குமார்(40)என்பவரை பிடித்து அவரிடமிருந்து 9 பாட்டில், ரொக்கம் ரூ.700, பறிமுதல் செய்தனர். இதே போல காமநாயக்கன்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த விக்னேஷ்(25) என்பவரிடமிருந்து 7 மதுபான பாட்டில்கள் ரொக்கம் ரூ.210 ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.