தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 
உள்ளூர் செய்திகள்

தஞ்சையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

உண்ணாவிரத போராட்டத்தில் சி.பி.எஸ்-ஐ ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அமல்படுத்திய அதே தேதியில் அமல்படுத்த வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் மண்டல அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மாநில தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.

வருவாய் கிராம உதவியாளர் சங்கத்தைச் சார்ந்த தமிழ்ச்செல்வன் விளக்க உரையாற்றினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் வரவேற்புரை ஆற்றினார்.

மாவட்டச் செயலாளர் சாந்தி கண்டன உரையாற்றினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சி.பி.எஸ்-ஐ ரத்து செய்ய வேண்டும்.

அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அமல்படுத்திய அதே தேதியில் அமல்படுத்த வேண்டும்.

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுபடி ஓர் கால அடிப்படையில் தமிழகம் முழுவதும் காலியாக இருந்த வருவாய் கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பணியாளர் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலர் பேசினர்.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.