உள்ளூர் செய்திகள்

தஞ்சையில், தனியார் நிதி நிறுவன அதிபர் வீட்டில் 50 பவுன் கொள்ளை

வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டார்.ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் பூக்கார 1-ம் தெருவை சேர்ந்தவர் வினோத் என்கிற கோபாலகிருஷ்ணன் (வயது 36). தனியார் நிதி நிறுவன அதிபர்.

இவர் வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டார்.

திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன.

பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதேபோல் அதே பகுதியில் உள்ள மகேஸ்வரி என்பவரது வீட்டிலும் 7 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.

மேலும் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT