உள்ளூர் செய்திகள்

சேலம் சீலநாயக்கன்பட்டியில் ஆட்டோ - மொபட் மோதி விவசாயி படுகாயம்

ரவுண்டானா பகுதியில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோ மொபட் மீது மோதியது இதில் சுப்பிரமணி பலத்த காயம் அடைந்தார்.

அன்னதானப்பட்டி:

சேலம் தாசநாயக்கன்பட்டி சவுடாம்பிகா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65). விவசாயி.

இவர் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானா பகுதியில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோ மொபட் மீது மோதியது. இதில் சுப்பிரமணி பலத்த காயம் அடைந்தார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT