உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடும் உயர்வு

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக முட்டை நுகர்வு அதிகரிப்பு.வட மாநிலங்களில் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதன் காரணமாக விலை உயர்வு.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது.

புதிய உச்சமாக மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு 5 ரூபாய் 75 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை அதிகபட்சமாக 5 ரூபாய் 70 காசுகளுக்கு மட்டுமே முட்டை கொள்முதல் செய்யப்பட்டது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதன் காரணமாகவும், வட மாநிலங்களில் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதன் காரணமாகவும் முட்டை கொள்முதல் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.