மின்சாரம் பாய்ந்து பலியான ராஜா. 
உள்ளூர் செய்திகள்

மங்கலம்பேட்டையில்மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி

வீட்டிற்குள் போதுமான வெளிச்சம் இல்லாததால், ராஜாங்கம், மின் வயரில் பல்பை கட்டி வேலை செய்ததார். அப்போது, எதிர்பாராத விதமாக ராஜாங்கம் மீது மின்சாரம் பாய்ந்தது.

மாலை மலர்

கடலூர்:

மங்கலம்பேட்டை பழைய நெசவாளர் தெருவை சேர்ந்த ராஜா (வயது 46), கொத்தனார். இவர் இவருடன் கள்ளக் குறிச்சி மாவட்டம், சிறு வத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம் (47), கள்ளக்குறிச்சி மாவட்டம், காட்டு நெமிலி கிராமத்தைச் சேர்ந்த வீரம்மாள் (30) ஆகிய 3 பேர் கொத்தனார் மற்றும் சித்தாள் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.இவர்கள் விருத்தாச லத்தை அடுத்த மங்கலம் பேட்டை ஷேக்நகரில் கட்டிட வேலை செய்துக் கொண்டிருந்தபோது, வீட்டிற்குள் போதுமான வெளிச்சம் இல்லாததால், ராஜாங்கம், மின் வயரில் பல்பை கட்டி வேலை செய்ததார். அப்போது, எதிர்பாராத விதமாக ராஜாங்கம் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதனைக் பார்த்த வீரம்மாள் ஓடி வந்து ராஜாங்கத்தை காப்பாற்ற முயன்றார். அப்போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனைப் பார்த்த ராஜாவும், உடனே ஓடி வந்து ராஜாங்கத்தை காப்பாற்ற முயன்றார். அப்போது, ராஜா மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால், அலறியடித்துக்கொண்டு, ராஜா கீழே விழுந்தார். அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த அங்கிருந்தவர்கள், வீட்டில் உள்ள மின்சார இணைப்பை துண்டித்து விட்டு, ராஜாவை மீட்டு உளுந்தூர் பேட்டை அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இது குறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இறந்து போன ராஜாவுக்கு ராஜகுமாரி என்ற மனை வியும், ஜனனி (19), பவதாரணி (16) என்கிற 2 மகள்களும் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி யில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.