உள்ளூர் செய்திகள்

கடலூரில் பரபரப்பு மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற பெண்

கடலூரில் பரபரப்பு மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற பெண் மருத்துவமனையில் அனுமதி.சூர்யா மற்றும் அவரது நண்பர் 2 பேரும் சத்யா வீட்டுக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மாலை மலர்

 கடலூர்:

கடலூர் குண்டு உப்பலவாடியை சேர்ந்தவர் சத்யா (வயது 25). சம்பவத்தன்று அந்த பகுதியில் சைக்கிளில் சத்யா சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் சத்யாவை வழிமறித்து மொபைல் எண்ணை கேட்டார். அப்போது சத்யா மொபைல் நம்பர் தர மறுத்ததால் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த சத்யா தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சத்யாவின் தாய் சூர்யாவின் மனைவியிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதனை அறிந்த சூர்யா மற்றும் அவரது நண்பர் 2 பேரும் சத்யா வீட்டுக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட சத்யா மாத்திரை சாப்பிட்டு விட்டதால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் சூர்யா, காத்தமுத்து என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.