உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் நகரில் வாடகை வீட்டில் பெண்களை வைத்து விபசாரம்- 3பேர் கைது

வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. 7 பெண்களை மீட்டு அனுப்பி வைத்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் சந்தேகத்திற்குரிய இடத்தில் சோதனை நடத்தினர்.

விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. நகரில் ரகசியமாக நோட்டமிட்டனர். அப்போது கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சொரத்தூரை சேர்ந்த வினோ(28) மற்றும் மரகதபுரம் சத்தியா(34) ஆகிய இருவரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதேபோல் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலீசார் பூந்தோட்டம் பாதை என்ற பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தியதில் ஒரு பெண் வாடகை வீடு எடுத்து பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பனையபுரம் பகுதியை சேர்ந்த அபுல்ஹசன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரத்தில் இருவெவ்வேறு இடங்களில் வாடகை வீடு எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 நபர்களை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் 7 பெண்களை மீட்டு அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT