உள்ளூர் செய்திகள்

கள்ளச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த பலர் கள்ளச்சாராயம் குடித்தனர்.கள்ளச்சாராய உயிரிழப்பு அதிகரித்து வருவதால் எக்கியார் குப்பம் கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர்.

மாலை மலர்

மரக்காணம்:

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் பலியானார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த பலர் கள்ளச்சாராயம் குடித்தனர்.

அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுவை ஜிப்மர், புதுவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் மரக்காணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதுவரை 13 பேர் பலியாகி இருந்தனர்.

இன்று காலை 9.30 மணிக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எக்கியார் குப்பத்தை சேர்ந்த கன்னியப்பன் (50) பலியானார். இதனால் பலி ண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

கள்ளச்சாராய உயிரிழப்பு அதிகரித்து வருவதால் எக்கியார் குப்பம் கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர்.