உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவன் கைது

வடிவேல் தனது மனைவி ஜோஸ்பினிடம் பால் கேனை சுத்தம் செய்து தருமாறு கூறினார். ஜோஸ்பின் தலையில் காயம் ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சென்னந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் வடிவேல் (வயது29). கட்டிட மேஸ்திரி. இவருக்கு ஜோஸ்பின் என்ற மனைவி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வடிவேல் தனது மனைவி ஜோஸ்பினிடம் பால் கேனை சுத்தம் செய்து தருமாறு கூறினார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தில் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து ஜோஸ்பினை அவரது கணவர் வடிவேல் சரமாரியாக தாக்கினார்.

இதில் ஜோஸ்பின் தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஜோஸ்பின் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT