சென்னை:
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை பார்த்ததும் சோபியா என்ற மாணவி, பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டார். இதனையடுத்து, தமிழிசை சவுந்தரராஜனுக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோஷமிட்ட சோபியாவுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். விசாரணைக்குப் பிறகு சோபியாவை போலீசார் கைது செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது. விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழிசை சவுந்தரராஜன் முன்பு பாஜகவை விமர்சித்ததாக மாணவி சோபியா கைது செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது என்று மனித உரிமை ஆணைய நீதிபதி கூறினார். மேலும், மாணவியின் தந்தைக்கு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.