மூலவர், சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
உள்ளூர் செய்திகள்

ஓசூர் போஸ் பஜார் கோதண்டராமர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

மகாதீபாராதனை செய்து, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் போஸ் பஜாரில் ஸ்ரீ சீதா, லட்சுமண சமேத கோதண்டராமர் சாமி கோவில் உள்ளது.இங்கு ராமநவமி உற்சவங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், நேற்று சாமிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர், மகாதீபாராதனை செய்து, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவாக அழைத்துசெல்லப்பட்டு, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (திங்கட்கிழமை) சந்திர மண்டல உற்சவமும், நாளை (செவ்வாய்கிழமை) திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, விழா கமிட்டி தலைவரும், முன்னாள் ஓசூர் எம்.எல்.ஏ.வுமான கே.கோபிநாத் தலைமையில் செயலாளர் நீலகண்டன், தலைமை அர்ச்சகர் கேசவ பட்டாச்சாரியார், அர்ச்சகர் ரகுராமன் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT