குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர். 
உள்ளூர் செய்திகள்

நிலக்கோட்டை அருகே தேங்கி நிற்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு

கடந்த சில தினங்களாக பெய்த தொடர்மழையால் நீர் கிராமத்துக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் கிராமத்தில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே ராமராஜபுரம் ஊராட்சி, ஆர். மீனாட்சிபுரத்தில் சுமார் 250 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் விவசாயம், கூலித்தொழில், மற்றும் கைவினைப் பொருட்கள் செய்யும் தொழிலாளர்களாக உள்ளனர்.

கடந்த சில தினங்களாக பெய்த தொடர்மழையால் நீர் கிராமத்துக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. மழைநீர் சூழ்ந்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால் கிராமத்தில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.