உள்ளூர் செய்திகள்

ஏரியில் தவறி விழுந்தவர் சாவு

நேற்று பாலத்தின் மேல் உட்கார்ந்து இருந்துள்ளார்.எதிர்பாராதமாக ஏரியில் தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது50). இவர் நேற்று பாலத்தின் மேல் உட்கார்ந்து இருந்துள்ளார். அப்போது எதிர்பாராதமாக ஏரியில் தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT