மனு கொடுக்க வந்த மகாதேவன். 
உள்ளூர் செய்திகள்

அரசு டாக்டர் மீது மாற்றுத்திறனாளிகள் லஞ்சப்புகார்

உண்மை மாற்றுத்திறனாளிகளுக்கு சதவீதம் போடாமல் டாக்டர் அலைக்கழித்து வருகிறார்.

மாலை மலர்

திருப்பூர்:

அரசு டாக்டர் மீது மாற்றுத்திறனாளிகள் லஞ்சப்புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சார்பில் மகாதேவன் என்பவர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

வெள்ளிக்கிழமை தோறும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும்  மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் அற்ற நபர்களிடம் அரசு டாக்டர் ஒருவர் லஞ்சம் வாங்கி கொண்டு அதிகமாக சதவீதத்தை வழங்கி வருகிறார்.

உண்மை மாற்றுத்திறனாளிகளுக்கு சதவீதம் போடாமல்  அலைக்கழித்து வருகிறார். மேலும் அந்த டாக்டர் சொந்த மருத்துவமனைக்கு வருமாறு கூறி சதவீதத்தை வழங்கி வருகிறார். இதனால் உண்மை மாற்றுத்திறனாளிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.