குருபூஜை நடந்தபோது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

கோவில்பட்டி பூமாதேவி ஆலயத்தில் குரு பூஜை

குருபூஜையைதொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது.ஜீவசாமாதி குரு சுப்பிரமணிய சுவாமிக்கு 21 வகையான மஞ்சள், மா, பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், பூர்ண கும்ப அபிஷேகம் நடைபெற்றது.

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் குரு பூஜை விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 7 மணிக்கு மேல் கணபதி பூஜை, சங்கல்பம், கும்ப பூஜை, கணபதி ஹோமம், குரு மூலமந்திர ஹோமம், பூர்ணகுதி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஜீவசாமாதி குரு சுப்பிரமணிய சுவாமிக்கு 21 வகையான மஞ்சள், மா, பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், பூர்ண கும்ப அபிஷேகம் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை சங்கரன் ஓதுவார் தலைமையில்,லட்சுமணன் சுவாமி, ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன், ஆறுமுகம் ஆகியோர் பூஜைகளை செய்தனர். இதில் சுப்பாராஜ் சங்கரேஸ்வரி, மாரியப்பன், கணபதி, அம்பலவாணன், கனகராஜ், லட்சுமணன், ராஜகாந்தன் மற்றும் விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, கொடி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் ஸ்ரீ குரு பாத தரிசன பரிபாலன அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT