பரசலூர் ஊராட்சியில் கிராம சபா கூட்டம். 
உள்ளூர் செய்திகள்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பரசலூர் ஊராட்சியில் கிராம சபா கூட்டம்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் ஒன்றியம், பரசலூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கர் முன்னிலையில் வைத்தார்.

ஊராட்சி செயலர் நாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.

அப்போது சிறப்பு (பற்றாளர்) அழைப்பாளராக ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கீதா கலந்து கொண்டு பேசினார்.

தண்ணியை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் தண்ணீரை தேவை இல்லாமல் வீணடிக்க கூடாது.

சுகாதாரமாக இருக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நடைபெற்று வரும் பல்வேறு அரசு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருவதையும் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை எடுத்து கூறுமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி பொதுமக்கள் வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் சங்கீதா நாராயணன் நன்றி கூறினார்.