அப்பாவு,மு.க.ஸ்டாலின்,ஆர்.என்.ரவி 
உள்ளூர் செய்திகள்

ஆளுநர் தேநீர் விருந்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பங்கேற்பு.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் இன்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.

இதில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆளுநர் தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான வைத்தியநாதன், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் பங்கேற்றார்.

காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி. த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். மேலும் திமுக வின் தோழமை கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கற்றனர்.

SCROLL FOR NEXT